ஒருங்கிணைந்த கல்வி வளாகம்அமைக்க கல்வித்துறை வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
00:09

ராமநாதபுரம்--ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில் அனைத்து அலுவலகங்களும் ஒன்றாக செயல்படும் விதத்தில் புதிதாக ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க வேண்டுமென முதன்மை கல்வி அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.மாவட்டத்தில் பள்ளி கல்விதுறை கட்டுப்பாட்டில், முதன்மை கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிகல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மண்டபம், உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் ஆகியவை செயல்படுகிறது. இவ்வலுவகங்களில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். இந்தநிலைமையில் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் போதுமான இடவசதியின்றி தனித்தனியாக மேல்தளம், கீழ்தளத்தில் அலுவலகங்கள் செயல்படுகின்றன.மேலும் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் காப்பு மையம், தலைமையாசிரியர்களுக்கான தனி அறைகளும், வட்டார கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்த தனி அரங்கம் இல்லை. ஆகையால் மேற்கண்ட அலுவலகங்கள் ஒருங்கிணைத்து, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டடம் அமைத்துதரவேண்டும். அதற்குரிய நிதி ஒதுக்கீடுஅனுமதிக்க வேண்டும் என கலெக்டர் சங்கர்லால்குமாவத் இடம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மனு அளித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X