போலீசார் தாக்கியதில் உயிரிழந்தாரா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
01:13

ராமநாதபுரம்:கல்லுாரி மாணவர் இறந்த வழக்கில், நேற்று வீடியோ பதிவுடன் மறு பிரேத பரிசோதனை நடந்தது.


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் மகன் மணிகண்டன், 21; அரசு கல்லுாரி மாணவர். கடந்த 4ம் தேதி மாலை 4:30 மணிக்கு, கீழத்துாவலுக்கு நண்பர்களுடன் டூ - வீலரில் சென்றார்.அப்போது, போலீசாரின் வாகன சோதனையில் நண்பர்கள் தப்பியோடினர்.


மணிகண்டனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்த போலீசார், இரவு 7:30 மணிக்கு வீட்டுக்கு அனுப்பினர். போலீசார் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறிய மணிகண்டன், அதிகாலை 1:00 மணிக்கு ரத்த வாந்தி எடுத்து இறந்தார்.


அடித்து கொலை




மகனை போலீசார் அடித்து கொன்று விட்டதாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கவும், மறு பிரேத பரிசோதனை நடத்தவும் அவரது தாய் ராமலட்சுமி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பரமக்குடி ஆர்.டி.ஓ., முன்னிலையில் தடய அறிவியல் நிபுணத்துவம் பெற்ற இரு டாக்டர்கள் மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்தவும், அறிக்கையை ஒரு மணி நேரத்தில் வழங்கவும் உத்தரவிட்டார்.நேற்று காலை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ஏ.டி.எஸ்.பி., ஜெயசிங் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஷேக் மன்சூர், பரமக்குடி ஆர்.டி.ஓ., முருகன், மணிகண்டனின் பெற்றோர், உறவினர்கள் வந்தனர். கடந்த 2020ல் இளைஞர் சந்தோஷ் வழக்கில் உள்ள நடைமுறைகளை நீதிபதி மேற்கோள் காட்டியிருப்பதாகவும், அதன்படி மணிகண்டன் தரப்பில் ஒரு டாக்டரையும், உறவினர் ஒருவரையும் பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் என மணிகண்டன் தரப்பில் வலியுறுத்தினர்.


மதுரை பா.ஜ., மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் வந்திருந்தார். மணிகண்டன் உறவினரான டாக்டர் ராம்குமாரையும் அனுமதிக்க கேட்டனர். இதற்கு ஆர்.டி.ஓ., ஷேக் மன்சூர் மறுத்தார்.இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. 'உண்மையை மறைக்க முயற்சிக்கிறீர்களா' என உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.மதியம் 1:20 மணிக்கு டாக்டர் சரவணன் வேண்டுகோள் கடிதத்தின் அடிப்படையில், கலெக்டர் சங்கர்லால் குமாவத் அனுமதி வழங்கியதால், அவரும் பிரேத பரிசோதனை அறைக்கு சென்றார்.


மதியம் 3:20 மணிக்கு பிரேத பரிசோதனை துவங்கியது.பிரேத பரிசோதனை மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, பெற்றோரிடம் கையெழுத்து வாங்க இருந்த நிலையில், மருது சேனை என்ற அமைப்பினர் ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். உடல் மீண்டும் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


அதிகாரிகள் பேச்சு நடத்திய பின், உறவினர்கள் உடலை பெற்று சென்றனர்.மாணவரின் இறுதி சடங்கு நடந்தது. இதில் பங்கேற்று, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கூறியதாவது:


மனிதாபிமானம் இல்லாத போலீசாரால் மணிகண்டன் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும் சாத்தான்குளம் சம்பவம் போல் வெளியில் தெரியவில்லை.கல்லுாரி மாணவர் குடும்பத்திற்கு நியாயம் வேண்டும். அந்த இளைஞர், போலீசாரால் வயல்வெளியில் தாக்கப்பட்டுள்ளார். தொடையில் ஏறி மிதித்து, மர்ம உறுப்பில் காயப்படுத்தியுள்ளனர்.


பிறகு ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டும்தாக்கப்பட்டுள்ளார்.முதல்வர் மவுனம் ஏன்?எஸ்.பி., கார்த்திக், போலீசாரை காப்பாற்ற பொய் கூறியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். தனி மனிதன் உயிர் முக்கியம் இல்லையா. மணிகண்டன் மரணத்தில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தின் போது, அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் குரல் கொடுத்தார். இப்போது ஏன் எதுவும் கூறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X