பாரதியார் பல்கலை சிண்டிகேட் தேர்தலில் கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பாரதியார் பல்கலை சிண்டிகேட் தேர்தலில் கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2021
01:43

கோவை:பாரதியார் பல்கலை சிண்டிகேட் தேர்தலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பாரதியார் பல்கலையில், கடந்த ஒராண்டாக சிண்டிகேட் குழுவில் முதல்வர், ஆசிரியர் பிரிவின் கீழ் நான்கு உறுப்பினர்களுக்கான இடம் காலியாக இருந்தது.இவர்களை, செனட் குழுவில் இருந்து தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.

இரு பிரிவுகளிலும் தலா நான்கு பேர் வீதம் எட்டு பேர் போட்டியிட்டனர். பல்கலை விதிகளுக்கு புறம்பாக உறுப்பினர் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஒரு குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர். தற்காலிக முதல்வர்களையும் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும் என மற்றொரு குழுவினர் வாதிட்டனர். இதனால், பல்கலை வளாகத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டு ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் காளிராஜ் அறிவித்தார்.இதன் பின், காலை, 10:30 மணி முதல் மாலை வரை ஓட்டுப்பதிவு நடந்தது.

ஓட்டு எண்ணிக்கை முடிவில், முதல்வர் பிரிவில் வெள்ளக்கோவில் கலை கல்லுாரி முதல்வர் சரவணக்குமார், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.ஆசிரியர் பிரிவில், திருப்பூர் பார்க் கல்லுாரி பேராசிரியர் ஞானசெந்தில்குமார், பல்லடம் அரசு கலை கல்லுாரி பேராசிரியர் ஜெயசந்திரன் வெற்றி பெற்றதாக பல்கலை சார்பில் அறிவிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X