என்.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி : தம்பதி கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
என்.எல்.சி.,யில் வேலை வாங்கி தருவதாக 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி : தம்பதி கைது
Added : டிச 09, 2021 | |
Advertisement
 
Latest district News

வடலுார்:என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் வடலுார் அடுத்த கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி மோட்சராணி 53. இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளார்.சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி 66. இவர் கல்லுக்குழி எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கிறார். இவர் அடிக்கடி மோட்சராணியின் கடைக்கு செல்வது வழக்கம்.
அப்போது மோட்சராணியின் மகனுக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் டிரைவர் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த ஒரு வருடத்திற்கு முன் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை.இதுகுறித்து கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

மோட்சராணி அளித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் மோசடி வழக்குப் பதிந்து வேலுசாமி 66; அவருக்கு உடந்தையாக இருந்த அவரது இரண்டாவது மனைவி வனிதா 36 ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் வடலுாரை சேர்ந்த மனோகரி 35; சந்தோஷ்குமார் ஆகியோரிடமும் தலா ரூ 50 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

மேலும் இவர்கள் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X