பாலியல் தொந்தரவு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பாலியல் தொந்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2021
02:11

கோவை:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை சேர்ந்தவர் ஏழனை பாண்டியன், 27. கடந்த 2018ம் ஆண்டு கோவையில் பணிபுரிந்த போது, இவருக்கும், கோவை ஆயுதப்படையில் பெண் போலீசாக பணிபுரிந்த பெண் போலீசுக்கும் பழக்கம் ஏற்பட்டது.


பெண் போலீசுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பெண் போலீசுடன் பழகியபோது எடுத்த படத்தை ஆபாசமாக சித்தரித்து, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி ஏழனை பாண்டியன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.பெண் போலீஸ், மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார், ஏழனை பாண்டியனை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X