விநாயகர் கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
02:13

அன்னுார்:அன்னுாரில் 241 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்ட துவக்க விழாவை முன்னிட்டு தி.மு.க.,வினர் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
கோவை மாவட்டம், அன்னுார் பகுதிகளுக்கு தினமும் 220 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் 241 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து உள்ளன. சிறுமுகை அருகே பவானி ஆற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு அன்னுாரில் ஒரு கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து அன்னுார் பாதவிநாயகர் கோவிலில் தி.மு.க.,வினர் திரண்டனர். கூட்டு குடிநீர் திட்டத்தில் நிலமட்ட தொட்டிக்கு வந்த தண்ணீரை எடுத்து வந்து பாத விநாயகருக்கு ஊற்றினர்.
விநாயகருக்கு ரோஜா மாலை அணிவித்து, சிதறு தேங்காய் உடைத்து, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
09-டிச-202113:30:12 IST Report Abuse
raja கோயில்கள் இப்போது கொள்ளையர்களின் கூடாரமாகி விட்டது....
Rate this:
Cancel
angbu ganesh - chennai,இந்தியா
09-டிச-202110:13:20 IST Report Abuse
angbu ganesh யாரோ சொன்னார்களாம் நெத்தில விபூதி பட்ட போட்டவங்க வோட்டு தேர்வை இல்லேன்னு. பச்சோந்திகள்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202109:54:35 IST Report Abuse
Kasimani Baskaran ரோஜா மாலையா? பகுத்தறிவு ஓவராக பல்லிளிக்கிறது. உலரும் பூக்களை வைத்தே கடவுளுக்கு மாலை போட வேண்டும் - ஆனால் அழுகும் பூக்களை வைத்து மாலை போடுவது அறிவீனத்தின் உச்சகட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X