மாரடைப்பில் டிரைவர் பலி தாறுமாறாக ஓடிய பஸ் | கடலூர் செய்திகள் | Dinamalar
மாரடைப்பில் டிரைவர் பலி தாறுமாறாக ஓடிய பஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2021
02:13

கடலுார்:கடலுார் அருகே, பஸ் டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். பஸ் தாறுமாறாக ஓடியதால், பரபரப்பு நிலவியது.


கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து தனியார் பஸ் நேற்று காலை 11:30 மணியவில் கடலுாருக்கு புறப்பட்டது. டிரைவர் செந்தில்நாதன், 46 ஓட்டினார். 50க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.பகல் 1:10 மணிக்கு, கடலுார் முதுநகர் அடுத்த பெரிய பிள்ளையார்மேடு அருகே டிரைவர் செந்தில்நாதனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மயங்கிய நிலையில் ஸ்டியரிங் மீது சாய்ந்தார்.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோர தடுப்புக் கட்டை, மின் கம்பம் மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.மின் கம்பிகள் துண்டாகின; பயணியர் அலறினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.டிரைவர் செந்தில்நாதனை, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X