அந்தியூர்:ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட லைன்மாரியம்மன் கோவில் பகுதியில், அந்தியூர் ரேஞ்சர் ருத்தரசாமி தலைமையில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த இடத்தில், சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த குமார், 40, திருநெல்வேலியை சேர்ந்த வேலு, 60, என்பதும், இவர்கள் பச்சை கிளிகள் இரண்டை பிடித்து வைத்திருந்தபோது கையும் களவுமாக சிக்கினர். இதையடுத்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து பச்சை கிளைகளை பறிமுதல் செய்து, இருவருக்கும் சேர்த்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.