எதிர்பாராத விபத்தா, வெளிநாட்டு சதியா? ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பேட்டி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
02:16

கோவை:தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம், விபத்தா, வெளிநாட்டு சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது


ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் கூறியதாவது:ரஷ்ய தயாரிப்பான மி-17 வி5 ரக ஹெலிகாப்டர், சமகாலத்திய அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டது.இவ்வகை ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி விபத்துக்குள்ளானதில்லை. இதை எல்லாம் மீறி ஒரு விபத்து நடந்துள்ளது என்றால், அது இயற்கையாலா அல்லது மனித இயல்புக்கு மீறி நடந்ததா அல்லது வெளிநாட்டு சதியா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.


இது, மிகவும் துரதிர்ஷ்டமான விபத்து. நாட்டின் மிக உயர் பாதுகாப்பு பதவியில் இருக்கும் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் சக ராணுவ அதிகாரிகளுடன் டில்லியில் இருந்து, நீலகிரி மாவட்டம், வெலிங்டனிலுள்ள ராணுவ கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்கிறார்.


அதற்காக டில்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்குகிறார். சூலுார் விமானப்படை தளத்தில் அதிகாரிகளை சந்தித்துவிட்டு, தன் மனைவி மற்றும் சக அதிகாரிகள் என, 14 பேருடன், மி - 17 வி5 ரக ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி செல்கிறார்; இந்த ெஹலிகாப்டரில் 36 பேர் வரை பயணிக்கலாம்.மொத்தம் 15 நிமிட துார பயணம் அது.


ஆனால், தரை இறங்குவதற்கு 5 நிமிடம் முன் ெஹலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புகுழுவினர் சடலங்களை மீட்டதோடு, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.ராணுவ உயர் அதிகாரிகள் போகும்போது, அவர்களுக்குண்டான விமானம்,ஹெலிகாப்டர் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டது. இந்த மி--17 வி5 ரக ஹெலிகாப்டர்,


உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகளவு வெள்ளம் வந்தபோது மக்களை மீட்க பயன்படுத்தப்பட்டது. தவிர, இந்தியாவில் உள்ள பல மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்த ஹெலிகாப்டர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல ராணுவ உயர் அதிகாரிகள், முக்கிய அமைச்சர்கள் அலுவலக ரீதியாக இந்த விமானத்தில் தான் பயணிப்பர்.இந்த விமானம் சமகால அதிக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டது.


பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இயந்திரக்கோளாறு என்பது எந்தவொரு இயந்திரத்திற்கும் வரலாம். தவிர இடி மின்னல் தாக்குதல் காரணமாகவும், குறைந்த உயரத்தில் பறக்கும்போது பனி மூட்டம் காரணமாக மரத்தின் மீது தவறுதலாக மோதியும் விபத்துகளில் சிக்கவும் வாய்ப்பு உண்டு.


சதிச் செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.விபத்தில் உயிரிழந்த முப்படைத்தளபதி பிபின் ராவத் கையில் எடுத்துள்ள சில வேலைகளை எல்லாம் பார்க்கும் போது, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில், வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாகவும் இது இருக்க வாய்ப்புள்ளது.


பிரதமர் மோடி சம்பவ இடத்திற்கு நேரில் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விசாரணையை ஏற்கனவே விமானப்படையினர் துவங்கி விட்டனர். நாட்டின் மிக முக்கியமான அதிகாரி என்பதால், பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியினர் கூடி ஆலோசனை நடத்துவர். இந்த விபத்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது.


ஏனெனில் ரஷ்ய தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் அதிகபட்ச தொழில்நுட்பம் கொண்டது. இந்த ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி எல்லாம் விபத்துக்குள்ளானது கிடையாது. மேலும், மூன்று விமானிகள் அதில் இருப்பர். இதெல்லாம் மீறி ஒரு விபத்து நடந்துள்ளது என்றால் அது இயற்கையாலா அல்லது மனித இயல்புக்கு மீறி நடந்ததா அல்லது வெளிநாட்டு சதியா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.


வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் அதிகபட்ச வீடியோக்களை பரப்புவது, மக்களை ஒரு பயத்திற்கு கொண்டு வந்து விடும். அந்த பயம் தேவையற்றது. இவ்வாறு மதன்குமார் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X