'டயாலிசிஸ்' சிகிச்சையில் ஒற்றை பயன்பாடு சிறுநீரகவியல் டாக்டர் சவுந்தரராஜன் பாராட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
02:30

சென்னை : கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், டாயலிசிஸ் சிகிச்சையில் ஒற்றை பயன்பாடு முறையை அறிமுகப்படுத்தியதற்கு, மூத்த சிறுநீரகவியல் டாக்டர் சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிறுநீரக துறையில், ஒற்றை பயன்பாடு முறையில் டயாலிசிஸ் சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



தமிழகத்திலேயே முதன் முறையாக, அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் கணவரும், மூத்த சிறுநீரகவியல் டாக்டர் சவுந்தரராஜன் நேரில் சென்று, மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர், சிறுநீரகவியல் துறை டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோரை நேற்று பாராட்டினார்.



டாக்டர் சவுந்தராஜன் அளித்த பேட்டி:அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி, ஆறு முதல் எட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில், அதிக கட்டணத்தில் ஒரே முறை தான், டாயலிசிஸ் கருவி பயன்படுத்தப்படுகிறது. டயாலிசிஸ் கருவி அதிக முறை பயன்படுத்தப்படுவதால், மஞ்சள் காமாலை, வைரஸ் தொற்று, கொரோனா தொற்று போன்றவை, ஒரு நோயாளியிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.மேலும், டாயலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ வல்லுனர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை கருவிகளை ஒரே ஒருமுறை பயன்படுத்துவதன் வாயிலாக, மருத்துவ வல்லுனர்களுக்கும், நர்ஸ்களுக்கும் பணிச்சுமை குறைகிறது.டாயலிசிஸ் சிகிச்சை கருவிகளை மறுசுழற்சி செய்வதால், தண்ணீர், கால விரயம், நோய் தொற்று பாதிப்பு உள்ளது.இதுபோன்று ஒருமுறை பயன்படுத்தப்படும் டயாலிசிஸ் சிகிச்சை முறையை, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், குறிப்பாக முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வந்து, சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.



இந்த மருத்துவமனையில், ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறைக்கு பாராட்டுக்கள். இத்தகைய ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறைகள், தெலுங்கானாவில் ஐந்து ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை முறை தான், தனியார் மருத்துவமனைகளிலும், வெளிநாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இதே டாயலிசிஸ் சிகிச்சை முறைகளை மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வந்தால், அனைத்து சிறுநீரக நோயாளிகளும் பயன் பெறுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.ஒற்றை பயன்பாட்டு டயாலிசிஸ் சிகிச்சை முறைக்கு, சிறுநீரக டாக்டர்கள் மோகன்தாஸ், பாலசுப்பிரமணியம், ஜோன்ஸ் ஆகியோரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X