சென்னை : பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்கும் பணி துவங்கியது.சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில், ரிசர்வ் வங்கி அருகே, பழமையான ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது.
இது பல நாட்களாகவே மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின், இந்த சுரங்கப்பாதை வழியாக சென்றார்.அப்போது, சுரங்கப்பாதை மிகவும் பாழடைந்து, மரம், செடிகள் முளைத்த நிலையில் இருந்தது. உடனடியாக பாலத்தை புதுப்பிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாலத்தில் உள்ள செடிகள் அப்புறப்பட்டன. சுரங்கப் பகுதியில் பழுதடைந்த சாலை புதுப்பிக்கப்பட உள்ளது. பாதசாரிகளின் சுரங்க நடை பாதை சீரமைக்கப்பட்டு, வண்ண விளக்குகள் நிறுவப்பட உள்ளது. இதையொட்டி, சுரங்கத்தில் நடை பாதை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நடை பாதையில், உடந்தை சுவர் பகுதிகள் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடக்கிறது. அதைத்தொடர்ந்து, பாலம் முழுவதும் சீரமைக்கப்பட உள்ளது.