சில வரி செய்திகள். | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
சில வரி செய்திகள்.
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2021
03:12



வளர்ச்சி திட்டம் குறித்து ஆலோசனைசெங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.


செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், திட்ட இயக்குனர் செல்வகுமார் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட அறிக்கை தயார் செய்து, கிராம சபை கூட்டம் நடத்துவது குறித்து பேசப்பட்டது

சார் - பதிவாளர் ஆபீஸ் திறப்புஉத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், 1.72 கோடி ரூபாய் செலவில், சார் - பதிவாளர் அலுவலக கட்டடம், புதிதாக கட்டப்பட்டது.முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக இக்கட்டடத்தை திறந்து வைத்தார். உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர், குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

சாலவாக்கத்தைச் சேர்ந்த ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அரசு கட்டடங்கள் திறப்பு உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர், திணையாம்பூண்டி, சித்தனக்காவூரில் புதிதாக ஊராட்சி கட்டடம் கட்டப்பட்டது. பென்னலுார், கட்டியாம்பந்தல், மலையாங்குளம், பழவேரி, பினாயூர், சித்தனக்காடூரில் புதிதாக அங்கன்வாடி மையம்.ஆதவபாக்கத்தில் புதிய பள்ளி கட்டடம் என, மொத்தம், 1.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள், நேற்று திறந்து வைக்கப்பட்டது

. உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தர், புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.மாடுகளை பிடிக்க உண்ணாவிரதம்வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடைச் சேர்ந்தவர் விஜயகுமார், 35; கீரை வியாபாரி மற்றும் சமூக ஆர்வலர். சாலை நடுவே படுத்துறங்கும் மாடுகளால், வாகன விபத்து ஏற்படுகிறது.

இதை தடுக்க வேண்டும் என, வருவாய் துறைக்கு புகார் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, ஊத்துக்காடு ஊராட்சி அலுவலகம் முன், தனி ஆளாக நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். வாலாஜாபாத் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X