சிவசங்கர் பாபாவுக்கு காவல் நீட்டிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
03:18

செங்கல்பட்டு ; பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவுக்கு, 'போக்சோ' வழக்கில், காவல் நீட்டிப்பு செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி உள்ளது.



இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 74, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவியர் புகார் அளித்தனர்.இதையடுத்து அவர் மீது, நான்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். தவிர, அதே பள்ளியில், பெண்களை மானபங்கம் படுத்தியதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இரண்டு வழக்குகள் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.



இதில் முதல் போக்சோ வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. புழல் சிறையிலிருந்து அவரை, போலீசார் அழைத்தனர்.நீதிபதி தமிழரசி முன் விசாரித்து, வரும் 22ம் தேதி வரை, சிவசங்கர் பாபாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதே வழக்கில், சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த பாரதி, சுஸ்மிதா, தீபிகா ஆகியோரையும் அன்றைய தேதியில் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டார்.



கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியில் டி.எஸ்.பி., வேல்முருகன், இன்ஸ்பெக்டர்கள் ஜோஸ்பின்மேரி, ரேணுகாதேவி, ரம்யா தலைமையில் 50க்கும் மேற்பட்ட சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.சிவசங்கர் பாபா தனி அறை, அலுவலகங்கள் மற்றும் பக்தர்கள் தங்கியுள்ள ஐந்து குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X