செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
03:27

பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கொடைக்கானல்: மன்னவனுாரில் வருவாய்த்துறை பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன், துணைத் தாசில்தார் ஜெயராஜ், வி.ஏ.ஓ., பரத் உள்பட பலர் பங்கேற்றனர். கவுஞ்சி, பூண்டி, கிளா வரை பகுதியினருக்கு நடந்த முகாமில் பட்டா மற்றும் வருவாய்த்துறை சார்ந்த திருத்தம் செய்யப்பட்டது. மலைக் கிராமத்தில் முகாம் குறித்து முன்னறிவிப்பு செய்யவில்லை என, கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.தேவர் பேரவை ஆர்ப்பாட்டம்பழநி:தமிழ்நாடு தேவர் பேரவை சார்பாக மயில் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவன் மணிகண்டன், உயிரிழந்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேற்கு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.முதியவர் பலிநிலக்கோட்டை: சி.புதுாரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 75. இவர் பெரியாறு வைகை பாசன கால்வாயில் கை, கால் கழுவிய போது தவறி விழுந்தார். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். தீயணைப்புத்துறையினர் சின்னச்சாமி உடலை போடிய கவுண்டம்பட்டி அருகே கைப்பற்றினர். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மெக்கானிக் பலிதிண்டுக்கல்:மாசிலாமணிபுரம் மெக்கானிக் சரவணன் 54, அவர் திண்டுக்கல் -- பழநி ரோட்டில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடைக்குள் தலையில் பலத்த காயத்துடன் கிடந்த அவரை ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.இளைஞருக்கு 'குண்டாஸ்'திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் வீரசின்னம்மன் கோயில் தெரு அருண்குமார் மகன் நந்தகுமார் 22. அப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதற்காக ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இருந்தும் அவர் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் படி, கலெக்டர் விசாகன் நேற்று நந்தகுமாரை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார்.விபத்தில் ஒருவர் பலிசின்னாளபட்டி: திண்டுக்கல் அருகே பொன்னிமாந்துறையைச் சார்ந்த கூலித்தொழிலாளி பாண்டி, 50. இருசக்கர வாகனத்தில் கொடை ரோடு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. பெருமாள்கோவில்பட்டி அருகே நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது, மதுரை ரோட்டில் பின்தொடர்ந்த கார் மோதியது. சம்பவ இடத்திலேயே இறந்தார். அம்பாத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X