நெல்லிக்குப்பம், : சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் வினோத்ராவ்; தனியார் நிறுவன தொழிலாளி. இவரது மகள் லட்சுமிபிரியா, 21; சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன், 21. இவர் சிதம்பரத்தில் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். வைத்தியநாதன் சென்னையில் பிளஸ் 2 வரை படித்தபோது லட்சுமிபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர்.
இதனையறிந்த லட்சுமிபிரியாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.இதனால் வீட்டை விட்டு வெளியேறிய லட்சுமிபிரியா, வைத்தியநாதன் ஆகியோர் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, பாதுகாப்பு கேட்டு, நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் மணகோலத்துடன் தஞ்சம் அடைந்தனர். டி.எஸ்.பி., சத்யராஜ், இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் விசாரித்து, வைத்தியநாதனுடன் லட்சுமிபிரியாவை அனுப்பி வைத்தனர்.