கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் கே.என்.பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர்.
அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் ராஜா, 60: என்பவரை கைது செய்தனர்.இதேபோல் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்றதாக கடலுார் துறைமுகம் போலீசார், சுப்பிரமணியன், 62; என்பவரையும், முதுநகர் போலீசார் ஜெயராமன், 60; என்பவரையும் கைது செய்தனர்.