வனத்துறை அதிகாரி கார் சிறைபிடிப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
வனத்துறை அதிகாரி கார் சிறைபிடிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 டிச
2021
05:14

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே தார் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

இருவேல்பட்டு கிராமத்தில் இருந்து காரப்பட்டு கிராமம் வரை செல்லும் சாலையில் 400 மீட்டர் சாலை போடும் பணி நேற்று நடந்தது. வனச்சரக அலுவலர் ஸ்ரீராம் மற்றும் அதிகாரிகள் இந்த சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அனுமதி பெறாமல் தார்சாலை போடக்கூடாது என கூறி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினர்.

கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு காரை சிறைபிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.திருவெண்ணைநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் குருபரன், பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 4:.30 மணியளவில் காரை விடுவித்து அங்கிருந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X