இனி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதியாகும்! மத்திய அரசின் புது சட்ட மசோதாவுக்கு வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

09 டிச
2021
05:35
பதிவு செய்த நாள்
டிச 09,2021 05:29

கோவை : ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஆள் கடத்தல் தடுப்பு சட்ட மசோதா மூலம், பெண்கள், குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்,'' என்கிறார் கோவையை சேர்ந்த மூத்த வக்கீல் முனைவர் சண்முகம்.



மத்திய அரசு, ஆள் கடத்தல் தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்துள்ளது. ஆள் கடத்தல் என்பது சர்வதேச அளவில் நடக்கும் குற்றம். இதை தடுப்பது, கடத்தப்பட்டால் மீட்பது, மீட்கப்படுவோருக்கு மறுவாழ்வு, நிவாரணம் அளிப்பதற்கு தற்போதைய சட்டங்களும், விசாரணை நடைமுறைகளும் போதுமானதாக இல்லை. அதற்கு தீர்வு காணும் நோக்கில், மத்திய அரசு புதிய சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளது.



இதன் முக்கிய அம்சங்கள் குறித்து கோவையை சேர்ந்த மூத்த வக்கீல் முனைவர் சண்முகம் கூறியதாவது: நாட்டின் மக்கள் தொகை 138 கோடியாக உள்ளது. இதில் சரி பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். மக்கள் தொகையில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே 13.59 சதவீதம் பேர். 14 வயதுக்கு உட்பட்டோர் 30.76 சதவீதம் பேர். இத்தனை பெரும் எண்ணிக்கையில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. கொத்தடிமைகளாக அடைத்து வைப்பதும், வடகிழக்கு மாநில பெண்கள் கடத்தப்பட்டு தென்னிந்தியா கொண்டு வரப்படுவதும், தென்னிந்திய பெண்கள் வட இந்தியாவுக்கு கடத்தப்படுவதும், தொடர்ந்து நடக்கும் சம்பவங்களாக உள்ளன.


இதோ வந்தது தீர்வு!




ஒரு குறிப்பிட்ட சிறு எல்லைக்குள் மட்டுமே செயல்படும் அதிகாரம் கொண்ட போலீசாரால், மாநிலங்கள் கடந்து நடக்கும் ஆள் கடத்தல் சம்பவங்களில், சரி வர செயல்பட முடிவதில்லை. வெறும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது மட்டுமே அவர்களது பணியாக இருக்கிறது. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதாக புகார்கள் வரும்போது, போலீசார் செய்வது அறியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் தான், இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.



கமிட்டியில் யார், யார்




இந்த சட்டத்தில் முக்கிய அம்சமாக, ஆள் கடத்தல் தடுப்பு கமிட்டி தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கமிட்டி அமைக்க முன்மொழிகின்றனர்.தேசிய கமிட்டியில் உள்துறை அமைச்சக செயலர் தலைவராக இருப்பார். சட்டம் மற்றும் நீதி, தொழிலாளர் துறை, பெண்கள் நலத்துறை உள்ளிட்ட ஒன்பது துறை அதிகாரிகள், ஏ.டி.ஜி.பி., தகுதிக்கு குறையாத அதிகாரி உறுப்பினராக இருப்பர். மாநில பிரதிநிதிகளும் இருப்பர். அத்துடன் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் நால்வரும் இருப்பர். அவர்களில் இருவர் பெண்கள் நலன் சார்ந்து செயல்படுவோராக இருப்பர். இவர்கள்தான் சட்டத்தை அமல் செய்வர்.



மாநிலத்தில் தலைமை செயலாளர் தலைமையிலும், மாவட்டத்தில் கலெக்டர் தலைமையிலும் இந்த குழுக்கள் செயல்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு, மறுவாழ்வு, பாதுகாப்பு, சொந்த இடத்தில் குடியேற்றம் செய்வது, குற்றம் தடுத்தல் எல்லாம் இந்த கமிட்டியின் பொறுப்பாகும். ஒவ்வொரு பகுதியிலும் ஆட்கடத்தலில் சிக்கி மீட்கப்பட்டோருக்கான பாதுகாப்பு இல்லம், மறுவாழ்வு இல்லம் ஏற்படுத்தி கண்காணிக்கும் பொறுப்பும் கமிட்டிக்கு உள்ளது.



பாதிக்கப்பட்டவர்களை அவரவர் சொந்த நாடு, சொந்த மாநிலம், சொந்த ஊர் அனுப்பி வைப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய அம்சம். அனைத்து வித ஆள் கடத்தலும் இந்த சட்டத்தின் வரையறைக்குள் வந்து விடும். இது, பெண்கள், குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு சட்டம்.ஆள் கடத்தலுக்கு துணை போகும் லாட்ஜ், வீட்டு உரிமையாளர்கள், டாக்டர், வக்கீல், அரசு ஊழியர் என அனைவரும் குற்றவாளிகளே என்கிறது இந்த சட்டம்.



என்.ஐ.ஏ., அமைப்பு நாடு முழுவதும் விசாரிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால், விசாரித்து தண்டனை பெற்றுத்தருவதும் எளிதாக இருக்கும். இந்த சட்டத்துக்கு சிறப்பு கோர்ட்டையும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி மாவட்டம்தோறும் சிறப்பு கோர்ட் வரும். எனவே அனைவரும் வரவேற்க வேண்டிய சிறப்பான சட்டமாகும். இவ்வாறு, சண்முகம் கூறினார்.



ஆள் கடத்தல் என்பது என்ன




பிச்சை எடுப்பதற்காக ஆட்களை கடத்துவது, குழந்தைகளை கடத்துவது, பெண்களை வற்புறுத்தி கருக்கலைப்புக்கு கொண்டு செல்வது, திருமணத்துக்கு கடத்திச் செல்வது, கொத்தடிமையாக கொண்டு செல்வது, பாலியல் வியாபாரத்துக்காக கொண்டு செல்வது, மறுவாழ்வு இல்லங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரை கொண்டு சென்றாலும் எல்லாம் ஆள் கடத்தல் சட்ட வரையறைக்குள் வந்து விடும்.



கடத்தப்பட்டவர்கள் இந்தியாவுக்குள் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தாலும், விமானம், ரயிலில் சென்றாலும், வெளிநாட்டினரை கடத்தினாலும் இந்த சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வழக்குகளை விசாரிக்க, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
09-டிச-202120:32:03 IST Report Abuse
Sivagiri என்ஐஏ-வா? எத்தனைதான் அவர்கள் விசாரிப்பார்கள்? ஏற்கனவே இங்கே மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள், so, டில்லி ஒன்றிய-பிரதேசம் போல - அனைத்து மாநில காவல் துறையையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதுதான் சால சிறந்தது.. ராணுவம் போல நாடு முழுவதுக்கும் ஒரே போலீஸ் - இதுதான் காலத்தின் கட்டாயம்... மாநிலத்தில் ஒரு ரேஷன் கடை-கூட முறைகேடு இல்லாமல் நடத்த முடியாத மாநில அரசு - மாநில அரசுகள் ஒயின் ஷாப் நடத்துவதற்கும், பக்கத்தில் இட்லி சாம்பார் சாதம் சப்பாத்தி குருமா - (அம்மா/அய்யா உணவகம் போல) நடத்துவதற்கும்-தான் லாயக்கு -
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-டிச-202115:57:38 IST Report Abuse
S.Baliah Seer அதெல்லாம் சரிதான்.பெண்களும் ,பெண் குழந்தைகளும் பாலியல் தொழிலில் இருக்கிறார்களே அவர்களை இயக்குவது யார்?இவர்களெல்லாம் பணக்காரனின் அடிமைகள்.உங்கள் சட்டம் இதை தடுக்குமா?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-டிச-202111:51:26 IST Report Abuse
RajanRajan அந்தந்த மாநில துறை சார்ந்த அமைச்சன்மார் முதல் எம்.எல்.லே கவுன்சிலர் வரை பொறுப்பாளர்களாக்க வேண்டும். இங்கு எந்த ஒரு குற்றம் அரங்கேறினாலும் அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் அரங்கேறாது. அத்தோடு தண்டனையும் கடுமையாக்க பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X