ஈரோடு: கொரோனா தொற்று, அதனை சார்ந்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இத்திட்ட உதவியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் அவ்வாறு இறந்தவர்கள் குடும்பத்தார் விண்ணப்பம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, பத்து தாலுகாவிலும் இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி துவங்கியது. மாவட்ட அளவில் நேற்று முன்தினம் வரை, 699 பேர் கொரோனா தொற்று உள்ளிட்ட பாதிப்பால் இறந்துள்ளனர். இவர்களில் சிலர், பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள். விண்ணப்பங்களை வருவாய் துறை, சுகாதார துறையினர் விசாரித்து, தகுதி பட்டியலை மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தர உள்ளனர்.