பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து பெண் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
11:10

பவானி: ஈரோடு மாவட்டம், சித்தோடு தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில், அடகு வைத்த நகையை மாற்றியதால், பிரியா என்ற பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.


சித்தோட்டை சேர்ந்தவர் பிரியா. கணவரை இழந்த இவர், தனது மகள் திருமணத்துக்காக, 3.30 பவுன் தங்க நகையை, 2019 ஜனவரியில் சித்தோட்டில் செயல்படும் தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில், 50 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தார். கடந்தாண்டு டிசம்பரில் நகையை மீட்க சென்றபோது, அவர் பெயரில் நகை ஏதும் இல்லை என கூறியதால் பிரியா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புகார் செய்ததும், நகையை தர நடவடிக்கை எடுப்பதாக நிறுவன அதிகாரிகள் கூறினர். ஓராண்டாக நகையை தராமல் இழுத்தடித்தனர். நேற்று முன்தினம் காலை, பைனான்ஸ் நிறுவனம் சென்ற பிரியா, தனது நகையை தராமல் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என அலுவலகத்திலேயே அமர்ந்தார். இரவு, 10:00 மணியை கடந்தும் அங்கேயே இருந்ததால், சித்தோடு போலீசார் விசாரித்தனர். சித்தோடு பைனான்ஸ் கிளையில் பணிபுரிந்த அருண், இவரது நகையை தனது பெயரில் மாற்றி வைத்து ஒரு லட்சம் ரூபாய் எடுத்ததும், அவர் கொரோனாவில் இறந்ததும் தெரியவந்தது. இதுபற்றி பைனான்ஸ் நிர்வாகம் அறிந்தும், போலீசில் புகார் கொடுக்காததை போலீசார் கண்டித்ததுடன், உடன் அப்பெண்ணுக்கு நகையை வழங்க வலியுறுத்தினர். இம்மாத இறுதிக்குள் நகையை தருவதாக நிர்வாக தரப்பில் கூறியதால், அதிகாலை, 3:00 மணிக்கு பிரியா வீட்டுக்கு சென்றார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X