பவானி: அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிபேட்டை, புது ரோட்டை சேர்ந்தவர் முருகேசன், 35, கார் மெக்கானிக். இவரது மனைவி சுந்தரம்மாள், 30. இவர்களது மகன் தர்னீஸ், 7. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம், மேட்டூர் மேகரை வாய்க்கால், குறிச்சி சைமன்மேடு பகுதிக்கு சென்ற முருகேசன், வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட அம்மாபேட்டை போலீசார், அவரது மனைவி சுந்தரம்மாளிடம் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்தனர்.