ஈரோடு: ஈரோட்டில், பூட்டிய வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. ஈரோடு, சூளை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 36. சித்தோடு ராயர்பாளையத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் மற்றும் தாயுடன் சொந்த வீட்டில் வசிக்கிறார். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மகன் பள்ளிக்கு சென்று விட்டார். அருண் குமார் தாய் தன் பேத்தியுடன் வெளியே சென்று விட்டார். யு.பி.எஸ். கனெக்?ஷனை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டனர். இந்நிலையில், மின் கசிவு காரணமாக வீட்டில் இருந்து நேற்று காலை, 11:15 மணிக்கு கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீஸ், ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் வீட்டில் இருந்த ?ஷாபா, பேன், 'டிவி', ப்ரிட்ஜ், துணிமணிகள், ஆவணங்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்கள் செல்வதற்கு முன்பாக, அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.