தொப்பூர்: தொப்பூர் அருகே, பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தி சென்ற, 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே குறிஞ்சிநகர் சுங்கச்சாவடியில் நேற்று, தொப்பூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சேலம் நோக்கிச்சென்ற லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து லாரி டிரைவர், கிளீனரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள், கேரளா மாநிலம் திருச்சூரை அடுத்த செவன்குழியை சேர்ந்த ரஷீத், பாலக்காடு மாவட்டம், அஞ்சுமூர்த்தியை சேர்ந்த சுரப்அலி, 39 என்பதும், பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு, 24 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்காவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், இருவரையும் கைது செய்து, லாரியுடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.