ஓசூர்: தேன்கனிக்கோட்டை நவ்ரோஜி தெருவில், அரசு தெலுங்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்ளது. பள்ளியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், விஷசந்துக்கள் நடமாட்டம் உள்ளது. நேற்று பள்ளி வகுப்பறைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் அலறியடித்து ஓடினர். பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து தேடியபோது, பாம்பு பிடிபடவில்லை. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியிலேயே இருந்தனர். பள்ளியை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.