ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த படதாசம்பட்டியை சேர்ந்தவர் தென்குமாரி, 40. இவர். படதாசம்பட்டி சுண்ட மலைகாட்டில், மாடு மேய்க்க சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த திருமால், 40, என்பவர் சில்மிஷம் செய்ததாக புகார்படி, சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், தன்னை தாக்கியதாக திருமால் புகார்படி, தென்குமாரியின் மகன்கள் ஹரிஷ், ராஜேஷ், உறவினர்கள் ரஜினிகாந்த், அவரது மனைவி கலைமணி ஆகியோர் மீது சாமல்பட்டி எஸ்.ஐ., ரவி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.