அன்னூர்: அன்னூர் அருகே சாலையோரத்தில் நின்றிருந்தவர்களை பார்த்து காரை ஸ்டாலின் நிறுத்தி பேசியது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
முதல்வர் ஸ்டாலின் குன்னூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு 9ஆம் தேதி மதியம் ஒன்றரை மணி அளவில் சென்று கொண்டிருந்தார். அன்னூர் அருகே ஆயிமாபுதூர் பிரிவு அருகே சாலையோரத்தில் கையில் வெள்ளைக் காகிதத்துடன் ஒரு பெண் நிற்பதை பார்த்து ஸ்டாலின் கார் நின்றது. உடனே அந்தப் பெண்ணை போலீசார் ஸ்டாலின் காருக்கு அனுப்பினர். ஸ்டாலின் என்ன மனு என்று விசாரித்தபோது, தான் ஜெராக்ஸ் எடுக்க வந்ததாகவும் தாங்கள் செல்வதாக கூறியதால் பார்ப்பதற்கு சாலையோரத்தில் நின்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு நின்றவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நன்றாக இருக்கிறீர்களா என்று விசாரித்தார். அவர்களும் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்து பதிலுக்கு நன்றாக உள்ளீர்களா என கேட்டனர். இதையடுத்து ஸ்டாலின் வணக்கம் தெரிவித்து புறப்பட்டுச் சென்றார். கிராமத்தில் சாலையோரத்தில் நின்றிருந்தவர்களை பார்த்து காரை ஸ்டாலின் நிறுத்தி பேசியது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது