விருத்தாசலம்:தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசனின் மனைவி, திடீர் நெஞ்சு வலியால் இறந்தார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கணேசன். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். இவரது மனைவி பவானி, 55; மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.பவானிக்கு நேற்று காலை 8:00 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விருத்தாசலம், தில்லை நகரில் உள்ள அவரது வீட்டில், பவானி உடலுக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.பவானி உடல் இன்று காலை 11:00 மணிக்கு, கழுதுாரில் உள்ள அமைச்சருக்கு சொந்தமான வெங்கடேஸ்வரா கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்றால், அமைச்சரின் மூத்த மகள் கவிதா இறந்தார்.
சபாநாயகர் அஞ்சலி
சட்டசபை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் துரைமுருகன், பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன், ஏ.வ.வேலு, பொன்முடி, சிவசங்கர், மகேஷ், ரகுபதி, முத்துசாமி, செஞ்சி மஸ்தான், கயல்விழி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.