சாலை விபத்தில் வாலிபர் பலிபுதுப்பட்டினம்: சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த அருண்குமார், 20 என்பவர், நேற்று முன்தினம், புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அவருடன், கூவத்துார் அடுத்த கொடூர் பகுதியை சேர்ந்த கண்ணன், 25 என்பவரும் பயணம் செய்தார்.மாலை 4:00 மணிக்கு, கல்பாக்கம் அருகில், இரண்டு கார்களை முந்திச் சென்று, முன்னால் சென்ற ஆட்டோவில் மோதி, அங்கேயே இறந்தார். கண்ணன் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.காதலன் தற்கொலை முயற்சிசென்னை: திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்ஜேல் உச்,19. இவர், பெரியமேடு பகுதி தங்கும் விடுதியில், அறை பராமரிப்பு பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சொந்த ஊரில் உள்ள, காதலிக்கும் தகராறு என, கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, விடுதியின் நான்காவது மாடியில் உள்ள அறையில், போர்வையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் தங்கி இருந்தோர் காப்பாற்றி, சென்ட்ரல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.இருவர் துாக்கிட்டு தற்கொலைஅயனாவரம்: அயனாவரம், ராஜு தெருவைச் சேர்ந்தவர், சங்கர் 51; கொத்தனார். இவரது மனைவி லலீதா 40. இவர் கடந்த 25ம் தேதி மதுராவாயலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். நேற்று மதியம் வீடு திரும்பிய போது, வீட்டில் கணவர் சங்கர் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்து.அயனாவரம் போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சங்கர், குடிபோதையில் தற்கொலை செய்தது தெரிந்தது. அயனாவரம்: அயனாவரம் முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் முருகன், ௪௦, மீன்பாடி வண்டி ஓட்டுபவர். இவர் மனைவி கீதா பிரியா 39. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 25ம் தேதி, கணவரிடம் பணம் வாங்கிக் கொண்டு, பாடியில் உள்ள தனியார் கடைக்கு, குழந்தைகளுடன் கீதா பிரியா சென்றுள்ளார்.அங்கு, குழந்தைகள் கேட்ட பொருட்களை வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கீதா பிரியாவை முருகன் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, தனி அறையில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். கீதா நேற்று உயிரிழந்தார். அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.