போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2021
04:34

தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'



வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 70; விவசாயி. இவரது மகன் கந்தவேல், 38. இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் கந்தவேல், மணியை தாக்கி உள்ளார். காயமடைந்த மணி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவர்அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார்,கந்தவேலை கைது செய்தனர்.

சாலை விபத்தில் கர்ப்பிணி பலி

மறைமலை நகர்: பொத்தேரி பகுதியில், அரசு பேருந்து எண். 'எம் 500' செங்கல்பட்டு -- தாம்பரம் வழியாக செல்லும் பேருந்து, மாலை 4:30 மணிக்கு தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது பேருந்தை, இருசக்கர வாகனம் முந்த முயன்ற போது, சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த 'பேரல்' மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலை ஓரத்தில் விழுந்தனர். இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.

சாலையில் விழுந்ததில் உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பஞ்சேரி, ஆகாஷ் நகரைச் சேர்ந்த பார்த்திபன் மனைவி ரிம்ரா, 22, என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஆறு மாத கர்ப்பிணியான அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு, அவர் இறந்தார். மற்றொருவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. டிரைவரிடம் மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூன்று கொள்ளையர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 41. கடந்த வியாழக்கிழமை 12:00 மணிக்கு, மூன்று பேர் சீனிவாசன் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த இரு பெண்களை கத்தியை காட்டி மிரட்டி, 44 சவரன் நகை மற்றும் 30 கிராம் வெள்ளி, 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.தனிப்படை போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு குற்றவாளியை தேடினர்.

இந்நிலையில் சாலவாக்கம் கவுதம் 26. மதுராந்தகம் சிவகுமார், 24, காஞ்சிபுரம் சந்தானகிருஷ்ணன், 28, என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ஒரு லட்ச ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X