கோவை:தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ், ரூ.3.18 கோடி மதிப்பீட்டில், 7.01 கி.மீ., துாரத்துக்கு தார் சாலைகள் அமைக்கும் பணி, மாநகராட்சி பகுதிகளில் துவங்கியது.அதன்படி, தெற்கு மண்டலம், 99வது வார்டு மேட்டு தோட்டம் குறுக்கு வீதிகள், 1 முதல், 14 வரை, ரூ.44.44 லட்சம் மதிப்பிலும், 95வது வார்டு திருமறை நகர் குறுக்கு சாலை, 16 முதல், 29 வரையிலான வீதிகளில், ரூ.64.24 லட்சம் மதிப்பீட்டில் உட்பட, பல்வேறு பகுதிகளில் தார் சாலை பணிகள் துவங்கின.கிழக்கு மண்டலம், 75வது வார்டு, நியூ போயஸ் கார்டன், 1 முதல், 7 வரையிலான வீதிகளில், ரூ.25.80 லட்சம் மதிப்பிலும், ஆப்பிள் கார்டன், கிரீன் பார்க், பாத்திமா நகர் பகுதிகளில், ரூ.61.30 லட்சம் மதிப்பிலும், தெற்கு மண்டலம், 85வது வார்டுக்கு உட்பட்ட குப்பண்ணன் தோட்டம் பகுதியில், ரூ.9 லட்சம் என மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில், ரூ.3.18 கோடி மதிப்பீட்டில், 7.01 கி.மீ., துாரத்துக்கு துவங்கிய தார் சாலை பணிகளை தரமாக முடித்து, விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.