முககவசம் அணியாததால் கொரோனா தொற்று அபாயம் : காற்றில் ப றந்த வழிகாட்டு நெறிமுறைகள்
Added : ஜன 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மதுரை, மதுரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பொது இடங்களில் பலரும் முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவதால் தொற்று அபாயம் உள்ளது.மதுரையிலிருந்து பிற மாவட்டத்திற்கும், பிற மாவட்டங்களில் இருந்து மதுரைக்கும், மாவட்டத்திற்குள்ளும் பஸ்களில் பயணிப்பவர்கள் மூலம் ஒருவரிடமிருந்து ஒரே நேரத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலோனோர் பஸ்சுக்காக காத்திருக்கும் போதும் பஸ்சில் ஏறும் போதும் முககவசம் அணிவதில்லை. ஒரு சிலர் பெயருக்கு முககவசத்தை நாடியில் அணிந்தபடி செல்கின்றனர்.

பல இடங்களில் சமூக இடைவெளியும் பின்பற்றப்படாத நிலையுள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது செயல்படுத்தியதை போல பயணிகள் ஏறுவதற்கு முன்பாக பஸ்சை கிருமி நாசினியால் சுத்தம் செய்து பயணிகளுக்கு சானிட்டைசர் வழங்க வேண்டும். முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிப்பதை தீவிரமாக செயல்படுத்துவதுடன் அவர்கள் கையில் முககவசம் வழங்கி அனுப்பினால் மற்றவர்களுக்கு தொற்று பரவாது. மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். வியாபாரிகளும் நுகர்வோரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.இதற்கிடையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை நேற்று ஆய்வு செய்த கலெக்டர் அனீஷ்சேகர் முககவசம் அணியாத பயணிகளுக்கு முககவசம் வழங்கி அணிவிக்க செய்து அறிவுறுத்தினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy - chennai,இந்தியா
07-ஜன-202212:31:58 IST Report Abuse
Ramasamy Now college and schools are closed. People are coming with their ward freely to பை பொங்கல் purchase in Ranganathan Street Chennai without mask. The crowd is u controllable in road side eateries in Ranganathan Street. People are like Honey bee in those eateries. because police are also helpless. They are begging the people not to come our with family unnecessarily. But no one is hearing their voice and not wearing mask too. Only way out is Rs.5000 fine for not wearing mask. or severe punishment like saudi is needed. Else No one can help even Govt. the people from spread. People should understand and follow the advise of Govt
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X