ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடி;: போலீசார் வேடிக்கை பார்ப்பது ஏன்
Updated : ஜன 07, 2022 | Added : ஜன 07, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மது அருந்தி பரவச நிலையில் ஆட்டோ ஓட்டுவது, சீருடை அணியாமல் கைலியுடன் உலாவுவது, ஓட்டுனர் இருக்கையில் மற்றொருவரையும் அமர வைப்பது என அட்டூழியம் செய்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



சென்னையில், 82 ஆயிரத்து, 700க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிவது இல்லை. ஒழுங்கீனமாக கைலியுடன் உலா வருகின்றனர். பயணியரிடம் மிரட்டிப் பேசுவது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, சுட்டிக்காட்டினால், 'ஆட்டோ தண்ணீரிலா ஓடுகிறது; நடந்து போக வேண்டியது தானே' என, நக்கல் அடிப்பது.கூடுதல் கட்டணம் கேட்டு பயணியரை பாதி வழியிலேயே இறக்கி விடுவது என, ஆட்டோ ஓட்டுனர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறிவிட்டன.

அட்டகாசம்பகலிலும் கூட மது அருந்தி, பரவச நிலையில் இருப்பதால் தான் ஆட்டோ ஓட்டுனர்களின் அட்டகாசம் எல்லை கடந்து விட்டதாக பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.பக்கவாட்டு கண்ணாடியை உட்புறமாக பொருத்தி, அதன் வழியாக பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண் பயணியரை வக்கிர புத்தியுடன் ரசிப்பது என, அடாவடி செயலும் அரங்கேறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன், சாலையோரங்களை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தங்களை ஏற்படுத்துதல், ஷேர் ஆட்டோ என்ற பெயரில் அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் செல்வது, பள்ளி நேரங்களில் குழந்தைகளை கணக்கு வழக்கின்றி மூட்டைபோல அள்ளிச் செல்வது போன்ற புகார்களும் தொடர்கின்றன.இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஒழுங்குப்படுத்த வேண்டிய காவல் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதாக, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தமிழக அரசு, 2013ல், 'ஆட்டோக்களில் கட்டாயம் மீட்டர் பொருத்த வேண்டும்' என, உத்தரவிட்டது.மேலும், 2 கி.மீ.,க்கு குறைந்தபட்ச கட்டணமாக, 25 ரூபாய்; அதற்கு மேல் ஓடக்கூடிய, ஒவ்வொரு கி.மீ.,க்கும், 12 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில், கட்டாயம், 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதை செயல்படுத்த அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர்; அதன் பின், அதை கைவிட்டனர்.பதைபதைப்புசென்னையில், 99 சதவீத ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்டோ ஓட்டுனர்களின் தடாலடி போக்கால், பயணியர் பதைபதைப்புடன் செல்ல வேண்டி உள்ளது.ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிய வேண்டும் என்பது கட்டாயம்.

கூடுதல் கட்டணம் வசூலித்தால், ஆட்டோவை பறிமுதல் செய்ய முடியும். ஆனால், காவல் மற்றும் போக்குவரத் துறை அதிகாரிகள், 'நமக்கு என்ன...' என்ற மன நிலையில் உள்ளனர்.இவர்கள் நினைத்தால், ஒரே நாளில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் சீருடை அணிய வைக்க முடியும். ஆனால், செய்வது இல்லை. கண்துடைப்புக்கு சில நாட்கள் மட்டுமே அபராதம் விதிக்கின்றனர்.சில ஆண்டுகள் முன், சென்னை முழுதும், 'அடாவடி' ஓட்டுனர்களுக்கு எதிராக, போக்கு வரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

தற்போது, 'சாலை பாதுகாப்பு வாரம்' என, பெயரளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி, போட்டோவுக்கு 'போஸ்' கொடுப்பவர்களாக உள்ளனர்.ஆட்டோ ஓட்டுனர்கள், கொரோனா பரவல் கட்டுப்பாடு விதிகளையும் பின்பற்றுவது இல்லை.இவர்கள் மீது, இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பயணியருக்கு பாதுகாப்பு என்ற நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஏன் இந்த அலட்சியம்?சென்னை போலீசில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த பிரதீப்குமார், நவம்பரில், கோவை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால், தற்போது ஐ.ஜி., ரேங்கில், தலைமையிடத்து கூடுதல் கமிஷனர் லோகநாதன் தான் போக்குவரத்து பிரிவையும் கவனிக்கிறார்.அதிகாரிகள் முழு கவனம் செலுத்தாததால், சென்னையில் போக்குவரத்து பிரச்னைகளுடன், ஆட்டோ ஓட்டுனர்களின் அடாவடிகளும் அதிகரித்துள்ளது.தமிழகம் முழுதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.,யாக உள்ள பிரமோத் குமாரிடம் உள்ளது. அவரும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.



- நமது நிருபர் -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kosalraman - Thiruvanmiyur,இந்தியா
10-ஜன-202210:46:31 IST Report Abuse
Kosalraman மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கு ஆட்டோ ஓட்டுனர்களின் பணிவான வேண்டுகோள் 8 வருடங்களாக தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வில்லை கடைசியாக மீட்டர் மாற்றம் செய்யப்பட்ட தேதி 25/08/2013, 8 வருடங்களில் விலைவாசி உயர்வு வீட்டு வாடகை உயர்வு நாங்கள் வாங்கும் உதிரிபாகங்களுக்கு GST உதிரிபாகங்கள் விலை உயர்வு FC கட்டணம் உயர்வு பெட்ரோல் , டீசல், கேஸ் விலை உயர்வு கடந்த சில காலங்களாக விலை ஏற்றங்கள் அதிக அளவில் நடுத்தர வர்க்கமான ஆட்டோ ஓட்டுனர்கள் மீது திணிக்கப்படுகிறது.... எட்டு வருடங்களுக்கு முன் பெட்ரோல்,கேஸ்விலை இன்று இரண்டு மடங்காக விலை ஏற்றம் கண்டுள்ளது மாறாக ஆட்டோ கட்டணம் இன்னும் அதே நிலையில்தான் உள்ளது....  குடும்பத்தை நிர்வாகம் செய்யவும்  ஆட்டோ வாடகை மற்றும் மாதத் தவணை கட்டவும் கடன் வாங்கும் சூழ்நிலை அதிகரித்து கொண்டு இருக்கிறது....  ஏற்கனவே கடன் சுமையால் மன அழுத்தத்தில் உள்ள ஓட்டுநர்கள், சவாரி பசியால் செய்வது அறியாது திகைத்துப் போயுள்ளனர்.....  தமிழக அரசு ஆட்டோ ஓட்டுனர்களை கண்டுகொள்ளாமல் காலம் கடத்துவது ஏனென்று தான் புரியவில்லை.....   எங்கள் வாழ்வாதாரத்திற்கு ஒரு நல்வழி பிறக்குமா என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜன-202205:29:06 IST Report Abuse
J.V. Iyer இந்த ஆட்சியில் எதிர்பார்த்ததுதான்.
Rate this:
Cancel
08-ஜன-202205:18:22 IST Report Abuse
அப்புசாமி எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல், மீட்டர் போடாம ஏமாத்தும் திருட்டு ஆட்டோக்கள் ஓடும் ஒரே பெரு நகரம் சென்னைதான். ஏமாற்றுதல் மட்டுமே தொழில் தர்மம். இந்த லட்சணத்தில் பாட்சா மாதிரி படங்கள் வேறே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X