சத்தியமங்கலம் : கடும் பனிமூட்டத்தால் பறக்க முடியாமல் தவித்த ஹெலிகாப்டர், கடம்பூர் மலையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, கடம்பூர் மலையில், அத்தியூர் என்ற இடத்தில், நேற்று காலை 11:00 மணியளவில், ஒரு ஹெலிகாப்டர் திடீரென தரை இறங்கியது. தகவலறிந்து கடம்பூர் போலீசார் விரைந்தனர்.பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி மருத்துவமனைக்கு, ஹெலிகாப்டர் புறப்பட்டுஉள்ளது. அதில், பாரத், அவரின் மனைவி ஷீலா, பைலட் ஜஸ்பால், இன்ஜினியர் அங்கித்சிங் என நான்கு பேர் இருந்தனர்.
கடம்பூர் பகுதியில் வரும் போது கடும் பனிமூட்டம் நிலவியதால், இயக்க முடியாத நிலையில், அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பனிமூட்டத்தின் தாக்கம் குறைந்த பின், மதியம் 1:30 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.