ஈரோடு: பொங்கல், மாட்டுப்பொங்கல் பண்டிகைகளின் போது, வண்ணப்பொடிகளை கோலமாவுடன் கலந்து கோலமிட்டு, பூஜை பொருட்களை படையலிட்டு, வழி படுவது வழக்கம். அதேசமயம் தைக்கு முன்னதாக மார்கழியில் இருந்தே, வாசலில் கோலமிடுவது தொடங்கும். இதனால் ஈரோட்டில் வண்ணப்பொடி, கோலப்பொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த சிறு வியாபாபரிகள், சேலம், காங்கேயம், வெள்ளகோவில், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளை கோலப்பொடிகளையும், தர்மபுரியில் இருந்து வண்ணப்பொடிகளையும் வாங்கி வருகின்றனர். இதை ஒன்றாக கலக்கி, பாக்கெட் பிடித்து, மாநகர சாலையோர கடைகளில் விற்பது வழக்கம். மொத்தம், 22 கலரில், 50 கிராம் முதல் ஒரு கிலோ வரை பாக்கெட் போட்டு விற்பனைக்கு வைத்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு மழை பொழிவு அதிகம் இருந்ததால், விவசாயிகள் செழிப்புடன் உள்ளனர். இதனால் கோலப்பொடி விற்பனை களை கட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.