கோபி: கொடிவேரி தடுப்பணையில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆங்கில புத்தாண்டு மற்றும் அதற்கு மறுநாள் வார விடுமுறை என்பதால், கொடிவேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த, 3ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த, 6ம் தேதி முதல், பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதி வரை தடை தொடரும் என்று, பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.