கோபி: கோபி தாலுகாவில், கோபி நகராட்சி, வாணிப்புத்தூர் பேரூராட்சி, டி.என்.,பாளையம் யூனியனில், வீடியோ கான்பரன்ஸில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதில், 2,517 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதேபோல், நம்பியூர் தாலுகாவில், 15 பஞ்சாயத்துக்களில், 1,030 பயனாளிகள், நம்பியூர் யூனியனில், 96 பேர் என, 1,126 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.