தாளவாடி: தாளவாடி ஒன்றியத்தில் ஆசனூர், இக்கலூர், மல்லன்குழி, நெய்தாளபுரம், திகினாரை, கேர்மாளம், திங்களூர், உள்ளிட்ட, 11 இடங்களில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைபட்டா, தாலிக்கு தங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி என, 1,798 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.