பவானி: சித்தோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2.5 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு வகுப்பறை கட்டடம், இரண்டு ஆய்வகம், டாக்டர் பார்த்திபன் பங்களிப்பில், 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டடம் என, எட்டு கட்டடம் கட்டப்பட்டது. இவற்றை முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, காஞ்சிக்கோயில் மருத்துவர் பார்த்திபன், ஆசிரியர்கள், மாணவியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சித்தோட்டை சேர்ந்த பொன்மணி தேவி, தனது நினைவாக ஒரு கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை, பள்ளி கட்டடம் கட்ட தானமாக வழங்கினார். முன்னதாக அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.