ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஒமைக்ரான் பரவல் மற்றும் மூன்றாம் அலை கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன் களப்பணியாளர்களான சுகாதாரத்துறையினர், துப்புரவு தொழிலாளர்கள், போலீஸ் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்துள்ள, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் செலுத்தப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள், 9,??? பேர், சுகாதாரத்துறையின் பிற பணியாளர்கள், 6,000பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் என, 9,?60 பேர் உட்பட, 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இத்தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே கோவேக்ஸின், கோவிஷீல்டு என தடுப்பூசி செலுத்தியோருக்கு, அதே நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வருவோர், ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, மொபைலில் பதிவிறக்க பகுதி அல்லது ஆதார் அட்டையை காண்பித்து செலுத்தி கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தும் பணியாளர்கள், அவர்களிடம் உள்ள போனில், கோவின் செயலியில், ஆதார் எண், ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியதற்கான தேதிகளை உறுதி செய்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்துவார்கள்.