ஈரோடு: போதை தலைக்கேறியதால், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர், மாணவியிடம் தகாத முறையில் நடந்த சம்பவம், ஈரோட்டில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் பவானி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, நேற்று மாலை, 6:00 மணியளவில் மூன்று வாலிபர்கள் மது குடிக்க வந்தனர். மதுவை வாங்கிக்கொண்டு, அருகில் மறைவான இடத்துக்கு சென்று குடித்தனர். இதில் ஒருவனுக்கு போதை தலைக்கேறி, அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தான். வைராபாளையம் சாலையில் ஒரு வீட்டில் கேட்டை தாண்டி குதித்து, உள்ளே சென்றான். வீட்டில் படித்துக்கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவியின் ஆடைகளை கிழித்து, அத்துமீறியுள்ளான். மாணவி அச்சத்தில் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு அவனை பிடித்தனர். கருங்கல்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த, 24 வயது வாலிபர் என்பது தெரிந்தது. அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். வெறித்தனமாக நடந்து கொண்டவனிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.