தாம்பரம் மாநகராட்சியின், பெருங்களத்துார் அலுவலகத்திற்குட்பட்ட, குட்வில், மூவேந்தர், பாலாஜி நகர்கள், காசா கிராண்ட் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதிகளில் சேரும் குப்பை, மாநகராட்சியினர் சரிவர அகற்றுவதில்லை. இதனால், உட்புற மற்றும் பிரதான சாலைகளில், ஆங்காங்கே குப்பை தேங்கி கிடக்கிறது.குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வீடுகள் தோறும் வராததால், பகுதி மக்கள் தெருக்களில் அவற்றை வீசி செல்கின்றனர். இதனால், கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.