ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 80.19 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் நவ.,23க்கு பின் நேற்று முன்தினம் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் உள்ளிட்ட 10 சன்னதிகள் முன்புறமுள்ள உண்டியலை கோயில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் ஊழியர்கள் திறந்தனர்.காணிக்கையை சேகரித்து கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் மேலாளர் சீனிவாசன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, முனியசாமி, கோயில் ஊழியர்கள் எண்ணினர்.இதில் ரொக்கப்பணம் 80 லட்சத்து, 19 ஆயிரத்து, 539 ரூபாயும், தங்கம் 50 கிராம், வெள்ளி 3 கிலோ காணிக்கையாக கிடைத்தது.