வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்பேசின்பாலம்: எம்.வி.என்., தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 38. மனைவியை பிரிந்து வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, பேசின்பாலம், பவர் ஹவுஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மூவர் அவரை இடைமறித்து, கத்தியால் வெட்டினர். அதில் இருவர் பேசின்பாலம் ரோந்து போலீசாரிடம் பிடிபட்டனர். விசாரணையில், அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார், 25 மற்றும் பிரதீப்குமார், 25, ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. மேலும், தினேஷ் குமாரது மனைவியின் ஆண் நண்பர் துாண்டுதலால், தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.தலைமறைவான மூன்றாவது நபரான அஸ்வின்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.மருத்துவமனை கண்ணாடி உடைப்புகீழ்ப்பாக்கம்: அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான், 25. இவர், நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு சந்தை அருகில் தன் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது வாகனத்தில் வரும்போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின் ஷாஜகானை, அவரது நண்பர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற மறுத்த ஷாஜகான், மருத்துவர்கள் மற்றும் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டு கண்ணாடியை உடைத்துள்ளனர். சம்பவம் அறிந்து வந்த, கீழ்ப்பாக்கம் போலீசார் ஷாஜகானை அழைத்து விசாரித்தனர். விசாரணையில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதால், போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.பெண்ணிடம் செயின் பறிப்புபோரூர்: சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 48. இவர், நேற்று காலை வைகுண்ட ஏகாதசி என்பதால், ராமாபுரம் பூத்தபேடு பகுதியில் உள்ள, பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின், வீட்டிற்கு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, 9 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.