திருவாடானை : திருவாடானை அருகே கப்பகுடியை சேர்ந்தவர்மாரிக்கண்ணு 38. இவருக்கும், காரைக்குடியை சேர்ந்த வீரபாண்டி 40, என்பவருக்கும் நெற்கதிர் அறுவடை செய்வது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. வீரபாண்டி, பழனிவேல் 37, சுப்பிரமணியன்40, ஆகியோர் மாரிக்கண்ணுவை தாக்கி கதிர் அறுக்கும் அரிவாளை காட்டி கொலைமிரட்டல்விடுத்தனர். மாரிக்கண்ணு புகாரில் திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.