மதுரை, மதுரை கிழக்கு, மேற்கு வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாங்குளம் விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த பண்ணையம், ஊட்டச்சத்து பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வனத்துறையை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன், துணை இயக்குனர்கள் அமுதன், சரவணன், உதவி இயக்குனர் வளர்மதி ஆகியோர் வழங்கினர். வேளாண் அலுவலர் சூரியபிரபா, டாக்டர் வெங்கடசாமி கலந்து கொண்டனர். வேளாண் உதவி அலுவலர் அன்புச்செல்வி ஏற்பாடுகளை செய்திருந்தார்.