மதுரை, :மதுரையில் ஒய்.எம்.சி.ஏ., பியூச்சர் கிரிக்கெட்டர்ஸ் அகாடமி சார்பில் 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி நடந்தது.முதல் போட்டியில் ஒய்.எம்.சி.ஏ. அணி 25 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. டொமினிக் கிேஷார் 51 ரன் எடுத்தார். அடுத்தாடிய எப்.இ.டி. அணி 24.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது. கோகுல்ராம் 51, அவுட் ஆகாமல் சச்சின் 40, ஷமீர் ஷூகாலி 33 ரன் எடுத்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் எப்.இ.டி. அணி வெற்றி பெற்றது.ஓ.ஜி.எப். அணி 25 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய எம்.கே.யு.சி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஓ.ஜி.எப். அணியை வீழ்த்தியது.வி.பி. அணி 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. கிேஷார் 74, கிருத்திக் 53 (நாட்அவுட்), விஷால் 42 (நாட்அவுட்) ரன் எடுத்தனர். அடுத்து ஆடிய வி.என். அணி 25 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் வித்தியாசத்தில் வி.பி. அணி வெற்றி பெற்றது.எஸ்.எஸ். அணி 25 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. சஞ்சய் 50 ரன். அடுத்து ஆடிய எஸ்.ஆர்.எஸ்.ஏ. அணி 21 ஓவர்களில் 71 ரன்களில் சுருண்டது. 62 ரன் வித்தியாசத்தில் எஸ்.எஸ். அணி வெற்றி பெற்றது.வி.பி. அணி 25 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஓ.ஜி.எப். அணி 24.1 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தது. 6 ரன் வித்தியாசத்தில் வி.பி. அணி வெற்றி பெற்றது.