அலங்காநல்லுார் ;அலங்காநல்லுாரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவையை துவக்க வலியுறுத்தி 32வது நாளாக விவசாயிகள் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். நேற்று விவசாயிகள், 15.பி.மேட்டுப்பட்டி, பெரிய ஊர்சேரி கிராம பெண்கள் சர்க்கரை ஆலை முன்பு பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.