திருப்பரங்குன்றம், :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு சுவாமிகளுக்கு மண்பானையில் பொங்கல் படைக்கப்பட்டது.கோயிலில் வழக்கமாக வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து சுவாமிகளுக்கு பிரசாதம் மட்டும் படைத்து, பூஜை நடக்கும். தைப்பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து அதில் மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு வைத்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்தனாம்பிகை அம்பாள் சன்னதியில் வைக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது.பின்பு உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு படைக்கப்பட்டது. மண்பானையில் பொங்கல் வைத்து படைக்கப்படுவது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே. ஹார்வி பட்டி பாலமுருகன் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் பொங்கல் படைக்கப்பட்டு பூஜை நடந்தது.