மதுரை :மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் தண்டலை, மேலவளவில் வயல்விழா நடந்தது.துத்தநாக நுண்ணுாட்ட சத்தை கரைத்து தரக்கூடிய பாக்டீரியா, அங்கக கரிமச்சத்தை அதிகரிக்கும் ஹியுமிக் அமிலத்தை நெல் சாகுபடியில் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்க திடல் அளிக்கப்பட்டது.ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன், தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: தழை, மணி, சாம்பல் சத்துகளை மட்டும் நிலத்திற்கு பயன்படுத்தினால் நுண்ணுாட்ட சத்து பற்றாக்குறை ஏற்படும். ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 200 மில்லி துத்தநாக பாக்டீரியா, 10 கிலோ ஹியுமிக் அமிலம், 20 கிலோ தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் கலந்து இட்டால் 15 சதவீத மகசூல் அதிகரிக்கும் என்றனர்.கூடுதல் தகவல்களுக்கு மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம்.