பேரையூர் :பேரையூர் முருகன் கோயில் குளம் சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.மொட்டை மலை அடிவாரத்தில் உள்ள இக்குளம் பக்தர்கள் குளிக்க பயன்படுகிறது. பல ஆண்டுகளாக துார் வாராமல் சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆங்காங்கே சிறு கிடங்குகளில் கிடைக்கும் தண்ணீர் பாசம் பிடித்துப்போய் பயனற்ற முறையில் உள்ளது.இதில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. தவிர குளத்தை நாய்களும் பன்றிகளும் பயன்படுத்தி வருகின்றன. சீமை கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது பேரையூர் பேரூராட்சி கடமை. இதை பல ஆண்டுகளாக செய்யாமல் காலம் கடத்தி வரும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.